Harry Potter and The Goblet of Fire
(குறிப்பு: இந்த வலைப்பதிவில் தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே எனது பார்வையில் விமர்சனம் செய்து வந்தேன். ஆங்கிலத் திரைப்படங்களையும் இவ்வாறு விமர்சனம் செய்யுமாறு சில நண்பர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி இன்று முதல் நான் அவ்வப்போது காணும் புதிய ஆங்கிலத் திரைப்படங்களையும் விமர்சனம் செய்வேன். நன்றி.)
நடிகர்கள்: Dan Radcliffe, Rupert Grint, Emma Watson, Robbie Coltrane, Ralph Fiennes
இயக்கம்: Mike Newell
ஜே.கே.ரௌலிங் எழுதி வரும் ஹாரி பாட்டர் வரிசை புத்தகங்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் உலகெங்கும் பெரும் வரவேற்பை அடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இது வரை வெளியான ஆறு புத்தகங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது Goblet of Fire என்ற நான்காவது புத்தகமே ஆகும். Quidditch உலகக் கோப்பை ஆட்டம், மூன்று பள்ளிகளுக்கிடையேயான TriWizard Tournament, பிரமிப்பூட்டும் மாயாஜாலக் கற்பனைகளின் உச்சம், ரான் ஹெர்மியொனி இடையிலான இணைப்பின் மெலிதான ஆரம்பம், வால்டிமார்ட்டின் மீள் எழுச்சி, அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கின்ற அட்டகாசமான கதையும் முடிவும் என்று அந்தப் புத்தகம், ஒரு கச்சிதமான படைப்பு. அதைத் திரைப்படமாக்குவதின் சவால்கள் மிகப் பெரியவை. இயக்குனர் Mike Newell அவற்றில் 80% நிறைவேற்றியிருக்கிறார் என்பது எனது முடிவு. அதுவே மிகப் பெரிய விஷயம் என்பது உண்மை.
மாயாஜாலக் காட்சிகள் மீதான ஆர்வம் பார்வையாளர்களுக்குக் குறைந்து விட்டதோ என்ற ஐயத்தின் அடிப்படையில், அவற்றைக் கணிசமாகக் குறைத்து, கதைக்கும் ஹாரி என்ற சிறுவனின் (பதின்மவயதினன்) வளர்ச்சியையும் திரைப்படத்தின் மையமாக்கியிருக்கிறார்கள். இதனால் முந்தைய திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கிறது இந்தப் படம். Quidditch உலகக் கோப்பைக்கே அவ்வளவாய் இடமில்லை, ஆரம்பத்தைக் காட்டிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள்.
நான்காவது திரைப்படம் என்பதால் ஹாரியும் அவனது நண்பர்களும் பள்ளி துவங்கும் வருட ஆரம்பத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் எதுவும் இல்லாமல், எல்லோரும் ரான் வீட்டிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் மைதானத்துக்குச் செல்வதில் ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறது, அடுத்த படங்களில் பழகி விடக் கூடும்.
முதன்முறையாக படம் முழுவதும் ஹாரி மட்டுமே இருக்கும் காட்சிகள் நிறைய. ரான், ஹெர்மியொனி ஆகியோரைத் தேட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, டிராகோ மால்ஃபாய் எல்லாம் கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்று இருக்கிறது. அவன் இடம்பெறும் ஒரு காட்சியிலும் அவனை ஒரு முயலாக்கி காமெடி செய்து விடுகிறார்கள்.
அறுநூறு பக்கப் புத்தகத்தை மூன்று மணி நேரத்துக்கும் குறைவான திரைப்படமாக ஆக்க வேண்டியிருப்பதால், திரைக்கதை பல சமயங்களில் புத்தகத்தை விட்டு விலகிச் செல்கிறது. புத்தகங்களின் தீவிர ரசிகர்களுக்கு இது மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடும். உதாரணமாக எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது, house elf-கள் எதுவும் இடம்பெறாதது. இரண்டாம் படத்திலேயே இடம்பெற்று மனதைக் கவர்ந்த Dobby என்ற house elf-உம், பார்ட்டி க்ரௌச் (Barty Crouch) வீட்டின் house elf-உம் புத்தகத்தில் நிறைய இடம்பெறும். அவற்றிற்காக உரிமைக் குரல் கொடுத்து ஹெர்மியொனி நடத்தும் SPEW (Society for Protection of Elf Welfare) போன்றவை மிகவும் ரசமான கட்டங்கள். அவை இல்லாமல் கடுப்பாகி விட்டது. திரைப்படத்தை மூன்றரை மணி நேரமாக்கியிருக்கலாம்.
பத்து நிமிடங்களே வந்தாலும், படத்தில் பட்டையைக் கிளப்புவது வால்டிமார்ட்டாகத் தோன்றியிருக்கும் Ralph Fiennes தான். பின்னுகிறார் மனிதர். கச்சிதமான தேர்வு.
Dumbledore, Mad-Eye Moody ஆகிய பாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். Snape-க்கு அவ்வளவாய் வேலை இல்லை. அது இன்னொரு சோகம்.
TriWizard Tournament நடைபெறுவதால் திரைப்படத்தில் பிரம்மாண்டத்துக்குக் குறைவில்லை. ஆனால் இறுதிப் போட்டியைச் சொதப்பியிருக்கிறார்கள். டிராகன்கள் இடம்பெறும் முதல் போட்டி மகா விறுவிறுப்பு.
கதையைத் த்ரில்லராகக் கொண்டு போக முயன்றிருக்கிறார்கள். என்ன சிக்கல் என்றால் எழுத்தில் படிக்கும் போது ரௌலிங் அங்கங்கே நழுவ விடும் க்ளூக்களை கண்டுபிடிப்பது மிக சிரமம். இறுதியில் உண்மை புரியும் போது ஒவ்வொன்றாய் இணைத்துப் பார்ப்பதில் உள்ள சுகமே அலாதி. ஆனால் திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்சியாகக் காட்டி விடுவதால் அவற்றை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடிகிறது. எனவே மிகுந்த சுவாரஸ்யம் என்று சொல்ல முடியாது.
Yule Ball எனப்படும் நடன நிகழ்ச்சியை ஒட்டிய காட்சிகள் அனைத்தும் மிக ஹாஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளன. அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் வெட்கமும் அந்தக் காட்சிகளின் சுவையான பின்புலமாகின்றன.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ரசிகர்களுக்கு நல்ல திருப்திகரமான படமாகவே இருக்கிறது. இன்று பகல் ஒரு மணி காட்சிக்கு அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்து நான் சென்றது சொந்தக் காசில். இப்போது இரவு பத்து மணி காட்சிக்கு நான் செல்ல இருப்பது HBO தொலைக்காட்சி நிறுவனத்தின் உபயத்தில் கிடைத்த இலவச டிக்கெட்டில். என்னத்தைச் சொல்ல :-))
உலகக் கோப்பை நடைபெறும் மைதானத்தில் உள்ள ஆறடிக்குப் பத்தடி டெண்ட்டுக்குள்ளே நுழையும் ஹாரி, மிகப் பரந்து விரிந்திருக்கும் அதன் உட்புறத்தை நோக்கி பிரமித்து, "I love magic" என்கிறான். படம் பார்க்கும் எனக்கும் அதே கருத்து தான்.
I love magic. I love Harry Potter. I love Rowling.
Bring it on, Ma'am.