சில்லுனு ஒரு காதல்
நடிகர்கள்: சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: கிருஷ்ணா
சூர்யா தன் மனைவி ஜோதிகாவைச் செல்லமாக 'ஜில்லு' என்று அவ்வப்போது அழைத்துக் கொஞ்சி மகிழ்கிறார் பாருங்கள், படத்தின் பெரும்பாலான "ஜில்" அதில் இருக்கிறது. மற்றபடி கொஞ்சம் சூடான காதல் தான்.
கதை என்று பார்த்தால் புதுமையெல்லாம் ஏதுமில்லை. அந்த ஏழு நாட்கள், ஹம் தில் தே சுகே சனம் (ஹிந்தி) என்று பல படங்களில் கணவர்கள் ஏற்கனவே செய்யத் துணிந்த காரியத்தை இதில் மனைவி செய்யத் துணிகிறார். Role Reversal. அதிலும் அதை long term debenture-ஆக இல்லாமல் short term hedge fund-ஆக அனுமதிக்கிறார். ஒரு நாள் மட்டும். அதிலும் பகல் மட்டுமே.
படத்தின் குறிப்பிடத்தக்க பலவீனம், ஜோவின் கதாபாத்திரம். consistency இல்லாமல் சொதப்புகிறது. காதலித்துத் தான் கணவனைக் கைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடைய அவர், காதலிக்காத ஒருவரை 'அய்யோ! என் வாழ்க்கையே போச்சு' என்ற தீவிர பயத்தோடு திருமணம் செய்து கொண்ட பின், அவர்களிடையே எவ்வாறு அன்பென்னும் ஊற்று பெருக்கெடுக்கிறது என்பதைக் காண்பிக்காமல் நேரே 'ஆறு வருடங்கள் கழித்து' என்று மும்பைக்கு shift செய்வதில் ஏதோ ஒன்று நிறைவேறாத குறையாய்த் தொக்கி நிற்கிறது.
In contrast, சூர்யா மற்றும் பூமிகாவின் கதாபாத்திரங்கள் consistent-ஆக, லாஜிக்கோடு நீள்கின்றன. எனவே அவர்களின் முடிவுகள், தயக்கங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் பார்வையாளனுக்குப் புரிகின்றன. அவர்களுக்குக் கிடைக்கும் sympathy & empathy ஜோவுக்கு மிஸ்ஸிங்.
சூர்யா இன்னும் மெருகேறியிருக்கிறார். நிறுத்தாதீர் அய்யா. இன்னும் மெருகேறிக் கொண்டே இரும். எதிர்பாராமல் பூமிகா வீட்டிற்கு வந்து நிற்க, ஜோவிடம் தடுமாற்றத்தோடு அவர் வந்திருப்பதை உரைக்க முனையும் காட்சியில் மனிதர் பிய்த்து உதறுகிறார். Awesome.
பூமிகா நிறைவான பங்களிப்பைச் செய்திருக்கிறார். படுக்கையில் போர்வைக்குள்ளிருந்து திருட்டுத்தனமாக சூர்யாவிடம் செல்பேசியில் பேசும் காட்சி நன்றாக இருக்கிறது. பொதுவாகவே பூமிகாவுக்குப் பின்னணி பேசியிருப்பவர் has done an extremely good job. Contrary to expectations, சூர்யா-ஜோவை விட சூர்யா-பூமிகா chemistry தான் படத்தில் பிரதானமாகவும் நச்சென்றும் இருக்கிறது. ஆனால் திரைக்கதை வேண்டுவது அதுவே என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.
பலவீனமான கதாபாத்திரமாயினும் ஜோவுக்கு அவ்வப்போது கலக்கி எடுக்க வாய்ப்புகள் உண்டு. பயன்படுத்திக் கொண்டு மிளிர்கிறார்.
வடிவேலு so-so. சந்தானம் so good. குறிப்பாக அவரது one-linerகளில் தியேட்டர் அதிர்கிறது.
பாடல்களில் நான்கு வகைகள் உண்டு. Mediocre, Ordinary, Brilliant and Extraordinary. A classic example where a brilliant song is turned extraordinary is நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் with captivating visuals and stunning editing technique. Top notch. முன்பே வா மற்றும் அவனுக்கென்ன அம்பாசமுத்திரம் பாடல்களும் கருத்தைக் கவர்கின்றன. தேவையற்ற காட்சியில் ஒரு தரித்திரமான பாடல் என்ற விருதை இந்த ஆண்டு பெறும் பாடல் - மஜா மஜா. Of the many ways to show that a husband and wife like each other, this is probably the worst.
வசனங்களில் இயக்குனர் கிருஷ்ணா கவனம் செலுத்தியிருக்கிறார். பூமிகாவின் கடைசிக் கடிதம் speaks many things with few words. திரைக்கதையிலும் அத்தகைய கவனத்தைச் செலுத்தியிருந்தால் இன்னும் மிகுதியாக ரசிக்கும்படியான படமாக இருந்திருக்கும்.
Still, when the screen is filled with two of my favourite actors, I am not the one to complain.
பின் குறிப்பு: எனது விருப்பத்திற்குரிய நடிகர்களுள் இருவரான சூர்யா-ஜோதிகாவுக்குத் திருமண நல்வாழ்த்துக்கள். Have a very happy and long married life.

9 Comments:
;-) விமர்சனம் படித்தவுடன் தமிழ்ப்படம் பார்த்தது போன்ற உணர்வு. அவ்வளவு எதார்த்தமான ஆங்கிலக் கலப்பு ;-P
Posted from haloscan comment system:
By jyoadmire | 09.12.06 - 2:58 am
Hi! I have been reading your reviews for quite a long time...
You hv been doing a great job!!!
On Sillunu Oru Kathal, quite a number of them told me tat it has dissapointed them!
Anyway, wat do u think about the outcome...I mean will it be a hit or a flop!!!
Regards,
Surya-Jo's great fan!!!
Hi jyoadmire,
I think the film will be an average hit. Certainly, the film disappoints, and lacks the blockbuster quality.
பாலா,
ஹி ஹி :-)
Just trying out a new style of writing. வேட்டையாடு விளையாடு விமர்சனமும் அப்படித்தான் எழுதியிருந்தேன்.
----Just trying out a new style of writing. ----
நிச்சயமாய்... எனக்கும் இந்த மாதிரி எழுதணும் என்று ஆசையுண்டு :-) (ஆனால், இணைய கண்டிப்புக்கு பயப்பட்டு விட்டு விட்டேன் :-D)
தொடர்ச்சியான சினிமா விமர்சனங்த்திற்கு நன்றி!
Thanks for the review...
very fair one
..aadhi
Posted from haloscan commenting system:
By Smartboy | 09.15.06 - 11:53 pm
//ஹி ஹி
Just trying out a new style of
writing.//
New ?? Not exactly ...
In Kumudam magazine, 'Lights-on' Vinod used to write in 'arai-kurai' english...!
//Boston Bala said...
----Just trying out a new style of writing. ----
நிச்சயமாய்... எனக்கும் இந்த மாதிரி எழுதணும் என்று ஆசையுண்டு :-) (ஆனால், இணைய கண்டிப்புக்கு பயப்பட்டு விட்டு விட்டேன் :-D)//
பாலா, இதுக்குத்தான் நாலஞ்சு வலைப்பதிவு வச்சுக்கணும்ங்கிறது. ஒண்ணுல புதுசா ஏதாச்சும் முயற்சி செஞ்சு அதுக்கு திட்டு விழுந்தாலும், அடுத்ததைக் காட்டி எஸ்கேப் ஆகிடலாம். :-)
//Posted from haloscan commenting system:
By Smartboy | 09.15.06 - 11:53 pm
//ஹி ஹி
Just trying out a new style of
writing.//
New ?? Not exactly ...
In Kumudam magazine, 'Lights-on' Vinod used to write in 'arai-kurai' english...! //
Hi Smartboy, I didn't mean totally new to the tamil field. New for me personally. Of course this is inspired by Lights On Vinoth. I think the same person is nowadays writing the column "Televishayam" in Thuglaq magazine, commenting on television programs.
Post a Comment
<< Home