வேட்டையாடு விளையாடு

நடிகர்கள்: கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: கௌதம் மேனன்

எவ்வளவு நாளாயிற்று இந்த மாதிரி படத்துக்குப் பொருத்தமான தலைப்போடு ஒரு படம் பார்த்து ரசித்து? தலைப்புக்காக முதல் சபாஷ்.

தொடர் கொலையாளிகள் இருவரில் ஒருத்தனை, பாதிக் கட்டுமான நிலையிலிருக்கும் (இரயில்வே ஸ்டேஷன் போன்ற) ஒரு இடத்தில், பிண்ணனி இசை அதிர அதிர கமல் துரத்திச் செல்லும் போது 'வேட்டையாடு விளையாடு' என்ற தலைப்பின் மகத்துவம் பரிபூரணமாக உணர வைக்கப்படுகிறதே, அதற்காகத் தான் சபாஷ்.

கௌதம் மேனனுக்கு காவல் துறை அதிகாரியின் psyche நன்றாகத் தெரிகிறது. அதைப் பின்னணியாக வைத்துக் கொண்டு திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்கிறார். அங்கங்கே X-files, Crime Scene Investigation போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சாயல் தெரிந்தாலும், தமிழ் சினிமாவில் மிக அரிதான stylish film-making இந்தப் படத்தில் அசாதாரணமாக விரவி நிற்கிறது. Beautiful to watch.

கடினமான பருத்தி நூல்களைப் போன்ற action திரைக்கதையில், மென்மையாக அங்கங்கே பட்டு இழைகளைப் போன்ற ரம்மியமான காதலைச் சேர்த்துப் பின்னி ஒரு அழகான காட்டன் சில்க் புடவையை கண்முன் நெய்து வித்தை காட்டுகிறார் கௌதம்.

கமல் மற்றும் அவரது மனைவிக்கிடையேயான ரொமான்ஸ், ஒரு ஹைக்கூ கவிதை போல் மிக சீக்கிரம் முடிந்து விடுவது ஏக்கத்தையே ஏற்படுத்துகிறது. ஜோதிகாவுடனானது சற்றே matured romance என்பதால் அது கொஞ்சம் சிக்கலான உரைநடைக் கவிதை. கவிதைகள் இரண்டுமே கலக்கல்.

படத்தில் கமல்ஹாசனை மிஞ்சி முதல் மதிப்பெண் எடுத்துத் தேறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் ஏற்கெனெவே மிகப் பிரபலம். பார்த்த முதல் நாளே பாடல், கேட்ட முதல் நாளிலிருந்தே சூப்பர்ஹிட். மஞ்சள் வெயில் மாலையும் அதே. இருந்தாலும் படத்தின் கடைசி அரைமணி நேரத்தில் அவற்றையெல்லாம் மிஞ்சி பின்னணி இசையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார். செம நச். வெல்டன் ஹாரிஸ்.

கமல்ஹாசனின் அனைத்துப் படங்களிலும் ஒரு defining 'கமல்ஹாசன் moment' இருக்கும். மற்ற எல்லோரையும் வீழ்த்தி தான் நடிப்பின் சக்கரவர்த்தி என்பதை பறைசாற்றும் காட்சி அது. இந்தப் படத்தில் அப்படியொரு காட்சி எதுவும் எனக்குத் தென்படவில்லை. அதனால் என்ன? பறைசாற்றாமல் போனாலும் சக்கரவர்த்தி எப்போதும் சக்கரவர்த்தி தான். நச்சென்று ஒரு stylish police officer-ஐக் கண்முன் நிறுத்துகிறார். Yet another fine performance. Long live the king!

ஜோதிகா. ஹி ஹி. "When Jack is in love with Jill, he is no judge of her" என்று ஒரு பழமொழி இருப்பதால் அவரைப் பற்றி எனது கமெண்ட் அம்புடுதேன். (Well, on second thoughts, screw the பழமொழி, ஜோதிகாவினது ஒரு அட்டகாசமான restrained performance.)

ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் காட்சிக் கட்டுமானமும் படத்தை கௌதம் நினைத்ததை விட கொஞ்சம் உயரத்துக்கு அழைத்துச் செல்கிறது. Bravo guys.

'காக்க காக்க'வின் hangover-ல் இருந்து கௌதம் இன்னும் விடுபடவில்லையோவென்று தோன்ற வைக்கும் பிற்பாதி காட்சிகள் மட்டுமே (திரைக்கதை இந்தியாவுக்குத் திரும்பும் போது) படத்தில் சற்றே சொதப்பியிருக்கும் அம்சம். காவல் துறை அதிகாரி மீதான personal retribution என்பதை காக்க காக்க-விலேயே தீவிரமாகக் காண்பித்து விட்டதால், வே.வி.-யில் தொட்ட குறை விட்ட குறையாக என்னெமோ போல் இருக்கிறது.

கோவாவில் ஒரு பாடல் காட்சியின் அவசியம் என்னவென்று புரியவில்லை. சம்பந்தமில்லாத நடனங்களுடன். எரிச்சல்.

கதையைப் பற்றி ஒரு சின்ன விவரிப்பும் இல்லையே என்கிறீர்களா? Man, get your *** out of that seat, log off the computer, and go watch the movie in a theatre.

Now. Go.

6 Comments:

Blogger CAPitalZ said...

///கமல்ஹாசனின் அனைத்துப் படங்களிலும் ஒரு defining 'கமல்ஹாசன் moment' இருக்கும். மற்ற எல்லோரையும் வீழ்த்தி தான் நடிப்பின் சக்கரவர்த்தி என்பதை பறைசாற்றும் காட்சி அது. இந்தப் படத்தில் அப்படியொரு காட்சி எதுவும் எனக்குத் தென்படவில்லை. அதனால் என்ன? பறைசாற்றாமல் போனாலும் சக்கரவர்த்தி எப்போதும் சக்கரவர்த்தி தான். நச்சென்று ஒரு stylish police officer-ஐக் கண்முன் நிறுத்துகிறார். Yet another fine performance. Long live the king!///

ஆமோதிக்கிறேன்!

///கோவாவில் ஒரு பாடல் காட்சியின் அவசியம் என்னவென்று புரியவில்லை. சம்பந்தமில்லாத நடனங்களுடன்.///

ஆமோதிக்கிறேன், ஆமோதிக்கிறேன், ஆனால் பாடலும் சூப்பர் தான்


______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

8:17 AM  
Anonymous Anonymous said...

Thanks Meenaks...
புது மாப்பிள்ளையாச்சே விமரிசனம் வருமா என்று நினைதேன் .. நன்றி
...aadhi

11:34 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

நம்ம விமர்சனம் இங்கே. சுட்டவும்

Comment by ILA | 08.28.06 - 1:34 am

Posted from Haloscan coimments

8:47 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Posted from Haloscan comments:
Comment by Filbert | 08.31.06 - 1:56 pm

Meens,
Looks like you have enjoyed the movie much more than I did. Though there were some positive points to be mentioned in the movie (like music, cinematography, Jo), the way the movie loses track in the second half once the perpetrators are known is a huge letdown, what with all the shouting & unwanted violence replete with an item number. I would personally rate this one way below KK. Kamal need not have wasted close to 2 years on this movie.

Plus, there should be a separate post on all the inspired/ copied scenes in the movie, starting from the romance between Kamal & Jo to the villains killing & driving around in a cargo van.

8:48 PM  
Blogger Prasanna said...

Hi Meenaks,
Nice review and keep it up. I have seen the movie and was not overly enthused. A few things struck me. The way the crimes of the psychopaths has been picturised is a bit crude and distasteful. Maybe it strengthens the characterisation but in an age when crimes against women are rising, I thought Gautam could have observed some restraint, since the characters seem to be misogynistic to the core. The fact that the criminals occupy so much of screen time put me off. Secondly, this film deserves an A rating and I am flummoxed how it got U/A. Am I the only one thinking that kids are best kept away from such movies? Lastly, there is a needless innuendo about homosexuality in the climax which could have been avoided. On the movie itself, technically it is superb but the big flaw is that Kamal and the criminals meet (and have a lengthy discussion too!) very early in the second half and despite having a chance they don't kill him. Overall I would say that the objecive of matching standards of English films shouldn't provide an excuse for ignoring the senitivities of tamil/Indian audience.

12:42 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Prasanna, I agree with most of your comments. However, as you have said, I think I have ignored the sensitivities, and hence I could like the film more than you.

9:01 PM  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: