புதுப்பேட்டை

நடிகர்கள்: தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: செல்வராகவன்

புதுப்பேட்டை - Survival of the Fittest. படத்தின் முதல் பாதியில் 'மாநகராட்சிப் பள்ளியில சந்தோஷமாப் பட்ச்சிக்கினிருந்த கொக்கி குமாரு' எப்படி ஒரு fittest தாதாவாக உருமாறுகிறான் என்பதைப் பிரமாதமாக, யதார்த்தமாகச் சொல்லியிருக்கும் செல்வராகவன், படத்தின் இரண்டாம் பாதியில் அவன் அரசியல் ஆசைகளுடன் அந்தக் களத்தின் எப்படி survive ஆகிறான் என்பதைச் சொல்வதில் போட்டு சொதப்பி எடுத்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கும் தனுஷின் மறு எழுச்சிக்கும் ஆப்பு வைக்கும் விதமாக இருக்கிறது படம்.

படத்தின் நிறைகளில் முதலிடம் வகிப்பது யதார்த்தமான பின்னணியும் அதற்கேற்ற வசனங்களும். ஒவ்வொரு கட்டமாக தனுஷ் குற்றங்களில் நிபுணத்துவம் பெறுவது - கஞ்சாப் பொட்டலங்களைக் கைமாற்றுவது, முதல் 'கையெடுக்கும்' அஸைன்மெண்ட் - இப்படி ஒவ்வொன்றாக அவர் முன்னேறி ஒரு கட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட தாதா அன்புவைப் போட்டுத் தள்ளி அவரது தலையோடு வெளியேறித் தன்னை establish செய்து கொள்வது வரை பட்டையைக் கிளப்புகிறது. தனுஷ் ரொம்பவே உயிரைக் கொடுத்து நடித்திருப்பது என்னவோ உண்மை தான். எதிர் கோஷ்டியிடம் கடுமையாக அடி வாங்கிய பிறகு அவர் உயிர்ப்போடு ஒரு அடி திருப்பி அடிக்கும் காட்சியில் தியேட்டரில் கைதட்டல்களுக்குப் பஞ்சமில்லை. தன் தாயைப் பற்றிக் கண்கலங்கிப் பேசும் காட்சிகளிலும் உயிர்ப்போடு செய்திருக்கிறார்.

படத்தின் நிறைகளில் அடுத்தபடியாக சொல்ல வேண்டியது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், சில பாடல்களின் சுவையான படமாக்கலும். பின்னணி இசையிலும் யுவன் ஒரு 'இளைய' ராஜா என்று இந்தப் படத்தில் சொல்ல வைத்திருக்கிறார். நெருப்பு வாயினில் பாடலில், மகாபாரதப் போர் ரேஞ்சுக்கு தனுஷும் அவரைக் கொல்ல வருபவர்களும் கத்தியை சுழற்றிக் கொள்வது மட்டும் பொருந்தாமல் இருக்கிறது.

படத்தின் நிறைகளில் அடுத்து சொல்லக் கூடியது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், காட்சிகளைக் கத்திரி போட்டு ஒட்டிச் சேர்த்த விதமும். சில காட்சிகளின் முடிவைக் கண நேரம் கண்முன்னால் காட்டி மாற்றி விடும் அதே கத்திரி, சில காட்சிகளின் முடிவில் கொஞ்ச நேரம் தயங்கிப் பார்வையாளனின் கண் வழியே உள்ளத்திற்கும் புகுத்தி விட்டே அடுத்த காட்சிக்கு நகர்கிறது.

படத்தின் மிகப் பெரிய சறுக்கல், சோனியா அகர்வாலின் கதாபாத்திரமும், தனுஷ் அவர் மீது ஆசை கொண்டு செய்து கொள்ளும் திருமணமும். சோனியா அகர்வால் பாத்திரம் இல்லாமல், தனுஷின் அரசியல் ஆசைகளை மட்டுமே கொண்டு சென்று படத்தில் இதே முடிவை எட்டியிருக்க முடியும். செல்வராகவன் உச்சகட்டமாய்ச் சொதப்பியிருப்பது இந்த மண்டை காய வைக்கும் காட்சிகளையே.

சிநேகா ஒரு பாலியல் தொழிலாளியாக இருப்பினும் தனுஷ் அவர் மீது பெரிதாய் காதல் மாதிரி ஏதோ ஒன்று ஏற்பட்டதாலேயே சேர்கிறார் என்பது போல் முதல் பாதியில் காட்சிகள் பில்டப் செய்கின்றன. ஆனால் சோனியாவுடன் முதலிரவு முடிந்த பிறகு தனுஷ், பெண்ணோடு சேர்வதில் உள்ள சுகத்தையும், மன அமைதியையும் பற்றி தனது ஆட்களிடம் நீளமாய் லெக்சர் அடிக்கும் போது, இதையெல்லாம் அவர் சிநேகாவிடம் உணரவேயில்லையா என்ற சந்தேகம் எழுந்து, அவர்களது உறவின் foundation கடுமையாக ஆட்டம் காண்கிறது.

தனுஷின் அரசியல் ஆசைகள் மூலம் இன்றைய அரசியல் சூழலை நுட்பமாக நையாண்டி செய்யும் நிறைந்த காட்சிகள் இல்லாமல் இல்லை. (முதலில் இருக்கும் கட்சியில் உரசல் வந்த பிறகு, தனுஷைத் தங்கள் கட்சியில் இணைந்து கொள்ள பல கட்சிக் காரர்கள் வருகிறார்கள். அதில் ஒரு கட்சியின் பெயர் 'வா.வா.போ.') But Selvaragavan takes a long time to come to his point. அதை மட்டும் தவிர்த்திருந்து, இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருந்தால் மிக சிலாகிக்கத்தக்க படமாக புதுப்பேட்டை அமைந்திருக்கும்.

பேட்டை மட்டுமே இருக்கிறது. 'புது' missing.

4 Comments:

Blogger ரவி said...

பாக்கலாம்னு இருந்தேன்...ஆப்பு வச்சிட்டீக...

இப்ப டாவின்சி கோடு தான் போகனும்..

10:36 pm  
Blogger Unknown said...

மீனாக்ஸ் ஒவ்வொரு படம் வரும் போதும் அதைப் பார்த்துவிட்டு தமிழ் மணம் வரும் போதும் உங்கள் விமர்சனத்தை ஆர்வமாய் எதிர்பார்ப்பது உண்டு..நீங்கள் இம்முறையும் ஏமாற்றவில்லை நன்றி.

தனுஷை வளர்த்துவிடும் தாதாவின் பெயர் அன்பு. முத்து அல்ல. கட்சித் தலைவராக வரும் டும்டும்டும் அழ்கம்பெருமாளின் நடிப்பு நன்று.

மொத்தத்தில் செல்வராகவன் சொல்ல வந்ததைச் சொல்லவில்லை.

தனுஷின் ஆரம்பத் தொண்டையில் ஆப்பரேஷன் காட்சிகள் சகிக்க முடியவில்லை.

படத்தில் லாஜிக் பல இடங்களில் மிஸ்சிங்.

மீனாக்ஸ் தலைநகரம் பற்றிய உங்கள் விமர்சனம் எதிர்பார்க்கிறேன். தருவீர்களா?

11:07 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

நன்றி தேவ்.

முத்துவை அன்புவாக மாற்றி விட்டேன்.

தலைநகரம் இன்னும் பார்க்கவில்லை. என் நண்பர்கள் அதைப் பார்க்க வேண்டாமென சிபாரிசு செய்திருக்கிறார்கள். நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் இந்த வார இறுதியிலேயே எனது திருமணத்திற்காக நான் சென்னையிலிருந்து கிளம்பி விடுவதால் அதற்குள் பார்த்து விமர்சனம் எழுத முடியுமென்று நினைக்கவில்லை.

11:42 pm  
Blogger Unknown said...

Wish u Happy Married Life Meenax.

Wishing u a SUPER Dooper Hit married life:)

5:07 am  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: