ஆறு

நடிகர்கள்: சூர்யா, த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, வடிவேலு, டெல்லி கணேஷ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்: ஹரி

சரண் தயாரிப்பு, ஹரி இயக்கம், சூர்யா நடிப்பு என்ற சுவாரஸ்யமான கூட்டணியிலிருந்து இப்படியொரு தொம்மையான படமா என்று பலமான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது 'ஆறு'. முதல் அரை மணி நேரத்தைத் தாங்கிக் கொண்டு மிச்சப் படத்தைப் பார்க்க உத்தேசிக்கும் பார்வையாளர்கள் மிகப் பெரும் பொறுமைசாலிகளாக இருக்க வேண்டியது மிக அவசியம். வெகுவாக சோதிக்கிறது படத்தின் ஆரம்பம்.

"அடியாள் கதை" என்று சொல்கிற gangster movie எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வரிக்கு வரி கெட்ட வார்த்தை பேசுவதாலேயோ அல்லது சத்தமாகக் கூச்சல் போட்டு விடுவதாலேயோ மட்டும் எவனும் 'macho' ஆக முடியாது என்ற அடிப்படையை யாருமே புரிந்து கொள்ளவில்லை. கம்பெனி (Company) என்ற இந்தித் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தன் பார்வையை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் திருப்பும் தோரணையிலேயே நடுங்க வைப்பார். அவர் அசல் ganster. சும்மா இவர்களைப் போல் சவுண்டு விட்டுக் கொண்டிருப்பவர்கள் வெத்து வேட்டு.

'நாதன் & கோ' என்ற பெயரில் நான்கு சகோதரர்கள் சென்னையின் பிரபல தாதாக்கள். அவர்களிடம் விசுவாசமான அடியாளாக இருக்கிறார் சூர்யா. ஒரு கட்டத்தில் அவர்களால் ஏமாற்றப்படுகிறார். அவர்களை பழிக்குப் பழி வாங்கும் டொச்சுத்தனமான கண்றாவிக் கதை. இந்தக் கதையை தன் குருநாதர் சரணுக்குச் சொன்ன ஹரியை நொந்து கொள்வதா, தயாரிக்க முன்வந்த சரணை நொந்து கொள்வதா, நடிக்க ஒப்புக் கொண்ட சூர்யாவை நொந்து கொள்வதா, அடப் போங்கடா டேய்.

மிஸ்டர் சூர்யா, இந்த மாதிரி படம் முழுக்க ஒண்ணுமே செய்யாமல் வந்து போய், பட எண்ணிக்கையை ஒன்று உயர்த்திக் கொள்ள இண்டஸ்ட்ரியில விஜய் மாதிரி ஹீரோக்கள் இருக்கிறார்கள் சார். உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை? உங்க கிட்ட நாங்க எதிர்பார்க்கிறது டோட்டலா வேற சார். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ். ஆக்ஷன் படங்களைக் கூட உங்களால வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்துப் பண்ன முடியும்ங்கிற எங்க நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுராதீங்கப்பு.

பொதுவாக எனக்கு ரொம்ப ஒல்லியான கதாநாயகிகளைப் பிடிக்காது. அதைக் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். இந்தப் படத்தில த்ரிஷா, ஒல்லி என்பதையும் தாண்டி எலும்பும் தோலுமாய் இருக்கிறார். அவுட்டோர் போன இடத்தில் எதுவுமே சாப்பிடாமல் பத்து நாள் பட்டினி கிடந்த மாதிரி. என்ன கொடுமையோ இதெல்லாம்.

பாராட்டத்தக்க நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக யாருமே இல்லை. எல்லோரும் கடனே என்று வந்து போகிறார்கள்.

முதல் அறிமுகப் பாடலில் தான் கானா கிங் தேவாவின் வாரிசு என்பதை நிரூபிக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. பிறகு அவரும் காணாமல் போய் விடுகிறார்.

கொஞ்சமும் நாகரிகமில்லாத காட்சிகளும் படத்தில் வசனங்களும் நிறைந்திருக்கின்றன. நெளிந்து கொண்டே பார்க்க வேண்டியிருக்கிறது. 'ஏ' சர்ட்டிஃபிகேட் மிகப் பொருத்தம்.

காமெடி டிராக் என்ற பெயரில் வடிவேலு ரொம்பவே டார்ச்சர் செய்து விட்டார். அது தனிக் கொடுமை.

படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் நான் தியேட்டரில் தூங்கியே விட்டேன். ஆனால் படம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகு, 'ஏண்டா இந்தப் படத்திற்குப் போய்த் தொலைச்சோம்?' என்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.

கஜினியில் சூர்யாவுக்குக் கிடைத்த நல்ல பெயரையெல்லாம் அதல பாதாளத்தில் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விடுகிறது 'ஆறு'. பரிதாபம்.

11 Comments:

Blogger சங்கரய்யா said...

//படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் நான் தியேட்டரில் தூங்கியே விட்டேன். ஆனால் படம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகு, 'ஏண்டா இந்தப் படத்திற்குப் போய்த் தொலைச்சோம்?' என்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.
//
அவ்வளவு மோசமா

8:02 am  
Anonymous Anonymous said...

Meenaks
You should read reviews or get others opinions before venturing to see such films.Surya did a
film titled as Sri and that was
a disaster.Perhaps he did not
realise that most gangster
films in Tamil are based on
simple and stale formulae.
Bala tried something different
in Nanda. But not all directors
want to think differently.

8:03 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Dear anonymous,

I heard some opinions before going to the movie. It sort of gave me an idea. But I was at least hoping that Surya would put in a decent enough performance worth speaking of. That was the biggest disappointment. (I am a big Surya fan.)

However, just because someone said some movie is bad, it won't stop me from going and seeing it for myself. I am a compulsive movie goer, and there are very few Tamil films that release in Bangalore.

7:49 pm  
Blogger Unknown said...

Dear Meenax sir,

I have added a link of your blogspot in my page.. I hope u dun have any objection to it.

-Dev
http://sethukal.blogspot.com/

10:17 pm  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//இந்த மாதிரி படம் முழுக்க ஒண்ணுமே செய்யாமல் வந்து போய், பட எண்ணிக்கையை ஒன்று உயர்த்திக் கொள்ள இண்டஸ்ட்ரியில விஜய் மாதிரி ஹீரோக்கள் இருக்கிறார்கள்//

;-)))

10:25 pm  
Blogger ஜெ. ராம்கி said...

//பொதுவாக எனக்கு ரொம்ப ஒல்லியான கதாநாயகிகளைப் பிடிக்காது.

Suryavukku... unga vimarsanam mattum illai intha punch dialoguevum pidikaathu... isn't it?
:-)

10:25 pm  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

ஈஸ்வர், படம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. படு மோசம் என்று தான் சொல்வேன்.

1:49 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Dev, you don't have to ask permission for giving the link. Thanks for linking to me.

1:50 am  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

ராம்கி, என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே? அவருக்கும் ஒல்லியான கதாநாயகிகளைப் பிடிக்காது தானே? அப்புறம் ஏன் கோபப்படம் போறாரு?

4:17 am  
Anonymous Anonymous said...

meenaks,

we're eagerly waited for its release here in dubai..but very disappointing film it seems..maruparuseelanai pannanum...

appuram..music director is devisriprasad i think.......

siva,

6:21 am  
Blogger Arun Vaidyanathan said...

Naan thappichaendaa swamyyyyyy!
Meenaks, Ozvinai Uruththu vandhu oottum theriyaadhaa oyy umakku :P

7:46 am  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: